News details

புதுக்கோட்டை மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் சட்ட விரோதமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை நடை பெற

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால் அரசு மதுபானக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் சட்ட விரோதமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை நடை பெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆய்வாளா ; ராமலிங்கம் மற்றும் உதவி ஆய்வாளர் மாயழகு தலைமையில் போலீசார் உடையாளிப்பட்டி அண்ணா நகர் பகுதியில் சோதனை மேற்கொண்டபோது கலிய பெருமாள் என்பவருக்கு சொந்தமான வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான 2,662மது பாட்டில்களை பறிமுதல் செய்து , மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் அவரது மகன் சக்திவேல் மற்றும் மதுபாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் கலியபெருமாள் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்துள்ளனர்.