News details

மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டியிடம் மனு அளித்துள்ளார்.

ஊரடங்கு காலத்தில் சமூக சேவகர்கள் வீதிகளில் வசிப்போர், உணவின்றி தவிப்போருக்கு உணவு, மளிகை பொருட்களை வழங்கி காத்து வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை அருகே பூவந்தியை சேர்ந்த டூவீலர் மெக்கானிக் பாண்டியராஜ் என்பவர் சற்று வித்தியாசமாக தன் தொழிலை இலவசமாக அளித்து ஊரடங்கு சேவையில் தன்னை ஈடுபடுத்தி உள்ளார். கடந்த 20 ஆண்டு காலமாக டூவீலர் மெக்கானிக்யாக பணியாற்றி வரும் அவர் ஊரடங்கு காலத்தில் வைரஸ் பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் டூவீலரில் சென்று வருகின்றனர். அவர்களுக்கு வாகனங்கள் பழுது ஏற்பட்டால் அவற்றை பழுது பார்க்க சிரமம் அடைகின்றனர். இதனை தவிர்க்கவே ஊரடங்கும் முடியும்வரை சிவகங்கை மதுரை சாலையில் டூ வீலர் பஞ்சர் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டால்; உடனடியாக வந்து பழுதினை நீக்கி தருவதாகவும,; அதற்கு அனுமதி வழங்ககோரி மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டியிடம் மனு அளித்துள்ளார்.