News details

கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 2,650 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் தொடர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 2,650 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் மொத்த பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,,00546 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஓரே நாளில் 19 பேர் உயிரிழந்தனர்.