News details

அசுத்தமான குடிநீர் பருகுவதால் பொதுமக்கள் சிறுநீரக செயலிழப்பால் பாதிப்பு

செய்யூர் அருகே அசுத்தமான குடிநீர் பருகுவதால் பொதுமக்கள் சிறுநீரக செயலிழப்பால் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த வாழை பட்டு கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் கிணற்றில் கழிவுகள் கலப்பதாகவும் கிணற்றின் மேற்கூரையை மூடாமலும் முறையாக பராமரிக்காததால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டி உள்ளனர். பல ஆண்டுகளாக அசுத்தமான குடிநீரை குடிப்பதாகவும் குடிநீரை கொதிக்க வைத்தால் அதில் சுண்ணாம்பு வருவதாகவும் இதனை சரி செய்ய கோரி பலமுறை அரசு அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர்கள் இடமும் கோரிக்கை வைத்து பலமுறை சாலை மறியல் போராட்டங்கள் நடத்தியும் அரசு தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும் இந்நிலை தொடர பட்டால் அப்பகுதி மக்கள் தங்களுடைய ஆதார் கார்டு குடும்ப அட்டை அனைத்தையும் அரசாங்கத்திடம் திருப்பி கொடுத்து விடுவதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதனை தொடர்ந்து இந்த அசுத்த நீரை பருகியதால் நான்கிற்கும் மேற்பட்டோர் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிலர் குடிநீர் சரியில்லாததால் சொந்த ஊரைவிட்டு குடும்பத்துடன் காலி செய்துகொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். ப்hPத்.. செங்கல்பட்டு அசுத்தமான குடிநீர் பருகவதால் சிறுநீரக செயலிழப்பால் பாதிப்பு கிணற்றின் மேற்கூரையை மூடமாலும முறையாக பராமரிக்காததால் குற்றச்சாட்டு