News details

சாராயம் விற்பவர்களை உடனே கைது செய்ய கோரி சாலை மறியல்

கள்ளக்குறிச்சி அருகே சாராயம் விற்பவர்களை உடனே கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்ட ஊர் பொதுமக்கள் மேலும் சாராயத்தை நடு ரோட்டில் கொட்டி தீயிட்டுக் கொளுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள பொரசக்குறிச்சி கிராமத்தில் அதிகப்படியான கள்ளச்சாராயம் விற்பதை கண்டித்து ஊர்பொதுமக்கள் கள்ளக்குறிச்சி-அடரி சாலையில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். மேலும் கள்ளத்தனமாக விற்ற 2,00 லிட்டருக்கு மேற்பட்ட கள்ளச்சாராயத்தையும் பேரலுடன் நடுரோட்டில் வைத்து சாராய விற்பவர்களை உடனே கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வரஞ்சரம் காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் சாராய விற்பவர்களின் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததை அடுத்து கலைந்து சென்ற பொதுமக்கள் அப்போது திடீரென கள்ளச்சாராயத்தை நடுரோட்டில் கொட்டிய பொது மக்கள் தீயிட்டுக் கொளுத்தியதால் அங்கு சிறிது நேரம் பரப்பரப்பு நிலவியது. இதே போன்று க.அலம்பலம் கிராமத்தில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்கபடுவதால் அங்குள்ள இளைஞர்கள், முதியோர்கள் பாதிக்கப்பட்டு வருகிறhர்கள் என்றும் உடனடியாக கள்ளச்சாராயம் விற்கப்படுவதை கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள் :. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விற்பவர்களை உடனே கைது செய்ய கோரி சாலை மறியல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை