News details

கொலை வழக்கில் ஜர்கண்ட் மாநில வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

கோபிசெட்டிபாளையம் அருகே வட மாநிலத்தை சார்ந்த இருவரை, கொலை செய்த வழக்கில் ஜhர்கண்ட் மாநில வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பி.மேட்டுப்பாளையத்தில் செயல்படும் விசைத்தறி பட்டறையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த நவீன்குமார், சுதேந்திரகுமார் வர்மா மற்றும் ஜhர்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரவீந்தரகுமார் ஆகியோர் ஒன்றhக வேலை செய்து வந்துள்ளனர். அப்போது நவீன்குமார் மற்றும் சுதேந்திரகுமார் வர்மா ஆகியோர் ரவீந்திரகுமாரிடம் அடிக்கடி தகராறு செய்ததுடன், கிண்டல் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆத்திரமடைந்த ரவீந்திரகுமார் தறிப்பட்டரையில் இருந்த இரும்பு பைப்பால் இருவரையும் தாக்கி கொலை செய்து, பிணத்தை குடோனில் மறைத்து வைத்து விட்டு, மற்றவர்களுடன் சேர்ந்து கொலை செய்யப்பட்ட இருவரையும் தேடி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தப்பிய ஓடி தலைமறைவான ரவீந்திரகுமாரை போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன் இரட்டை கொலை செய்த ரவீந்திர குமாருக்கு ஆயுள் தண்டனையும், கொலையை மறைத்ததற்கு 8 ஆண்டு தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டதை தொடர்ந்து ரவீந்திரகுமார் கோவையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கோபிசெட்டிபாளையம் வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கு ஜhர்கண்ட் மாநில வாலிபருக்கு ஆயுள் தண்டனை