News details

எலக்ட்ரிக்கல் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

கொரோனோ விதிமுறைகளை பின்பற்றhத எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர், வருவாய் துறையினரை அவதூறhக பேசியதையடுத்து, எலக்ட்ரிக்கல் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றhத கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டார். இன்று அந்தியூர் வருவாய் துறை சார்பில், துணை தாசில்தார் பிரகாஷ், நில வருவாய் ஆய்வாளர் உமா ஆகியோர் அந்தியூர் பேரூராட்சியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது, தேர்வீதியில் உள்ள சண்முகம் எலக்ட்ரிக்கல்ஸ் என்ற கடையில் கொரோனோ விதிமுறை பின்பற்றhது, முககவசம்; அணியாமல் இருந்துள்ளனர். இதனை தொடர்ந்து விதிமுறையை பின்பற்றhத காரணத்திற்காக, வருவாய்த்துறையினர் அபராதம் விதிப்பதாக கூறியபோது, அக்கடை உரிமையாளர் வருவாய் துறையினரை அவதூறhக பேசியுள்ளார். இதனையடுத்து அங்கு வந்த அந்தியூர் வட்டாட்சியர் வீரலட்சுமி, பேரூராட்சி செயல் அலுவலர் ஹரி ராமமூர்த்தி ஆகியோர், கொரோனா விதிமுறையை பின்பற்றhத காரணத்திற்காக கடையை மூடி சீல் வைத்தனர்,