News details

டெக்ஸ்டைல் ஏற்றுமதி தொழிலை காத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி

தினந்தோறும் நு}ல்விலை ஏற்றத்தினை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்வரவேண்டுமென்றும், கொரோனா இரண்டாவது அலையின் போது அத்தியாவசிய தேவைகளுக்காக டெக்ஸ்டைல் ஏற்றுமதி தொழிலை காத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றியினை தெரிவித்தனர். கரூர் டெக்ஸ்டைல் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏற்றுமதி நிறுவனங்களையும், அதை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களையும், அத்தியாவசிய தேவைகளுக்காக கடைஅடைப்பிலிருந்து விலக்கு அளித்ததற்காக கரூர் ஏற்றுமதியாளரக்ள் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்தார். அதே போல் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு எப்போதும் போல, வெப்பமானி என்கின்ற தெர்மல் ஸ்கேனர், சானிடைசர், முகக்கவசங்கள் மற்றும் சமூக இடைவெளி கட்டுப்பாடுகளும் தொடர்ந்து இருந்து கொண்டே தான் வருவதாகவும் கூறினார். மேலும். சென்றமுறை கொரோனா காலத்தில் ஜவுளித்தொழிலுக்கு உதவியது போல், இந்த முறையும் உதவ வேண்டுமென்று கரூர் டெக்ஸ்டைல் ஏற்றுமரியாளர்கள் சங்கத்தலைவர் அட்லஸ் கேட்டுக் கொண்டார். பைட்….அட்லஸ் நாச்சிமுத்து டெக்ஸ்டைல் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தலைவர் கரூர் தமிழக முதலமைச்சருக்க கரூர் டெக்ஸ்டைல் ஏற்றுமதியாளர்கள் சங்க சார்பில் நன்றி ஜவுளித்தொழிலுக்கு உதவ வேண்டும் என அட்லஸ் நாச்சிமுத்து கோரிக்கை