News details

மீன் ஏற்றி செல்லும் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

திருவள்ளூர் அருகே மீன் ஏற்றி செல்லும் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. காவல்பட்டி கிராமத்தில் பழவேற்காட்டில் இருந்து ஆந்திராவிற்கு ஐஸ் கட்டிகளை ஏற்றிச்சென்ற மீன்லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்ததில் லாரியில் இருந்த பழவேற்காடு முகமதுஅக்ரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.திருவண்ணாமலையைச் சேர்ந்த லாரிஓட்டுநர் லோகநாதன் பலத்த காயத்துடன் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து தகவலறிந்து வந்த பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மீன் ஏற்றி செல்லும் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை