News details

அரபு உலகின் முதல் பெண் வீராங்கனை உள்பட 2 புதிய அமீரக விண்வெளி வீரர்கள் தேர்வு

அமீரகத்தின் 2 புதிய விண்வெளி வீரர்களாக நோரா அல் மத்ரூசி (வயது 27) என்ற பெண்ணும் மற்றும் முகம்மது அல் முல்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அமீரக விண்வெளி பயண திட்டத்துக்கு விண்ணப்பித்த 4,305 விண்ணப்பங்களில் இருந்து இவர்கள் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 1,400 பேர் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். ஒவ்வொருவரது வயது, கல்வித்தகுதி அடிப்படையில் இந்த தேர்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தேர்வு செய்யப்பட்ட இருவருக்குமான பயிற்சி, அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி திட்டத்துடன் இணைந்து விரைவில் மேற்கொள்ளப்படும். தேர்வு செய்யப்பட்ட இருவரும் அமீரகத்தின் பெருமையை வானில் மேலும் உயர பறக்க வைப்பர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முதல் பெண் விண்வெளி வீராங்கனை இந்த புதிய 2 விண்வெளி வீரர்களும், ஏற்கனவே விண்வெளிக்கு சென்ற அமீரகத்தின் முதலாவது வீரர் ஹஸ்ஸா அல் மன்சூரி மற்றும் சுல்தான் அல் நியாதி ஆகியோருடன் இணைந்து செயல்படுவர்.விண்வெளி தொடர்பான ஆய்வுகள் கடந்த 1960-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும், ஆண்களின் ஆதிக்கமே இந்த துறையில் இருந்து வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில் அமீரகத்தின் சார்பில் முதன் முதலாக பெண் விண்வெளி வீராங்கனை நோரா அல் மத்ரூசி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இவர் அரபு உலகின் முதலாவது பெண் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.கடந்த ஆண்டில் மட்டும் 550-க்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு சென்றுள்ளனர். இவர்களில் 65 பேர் மட்டுமே பெண்கள் ஆவர். அமீரகத்தின் சார்பில் ஆண், பெண் இருவருக்கும் சரியான வகையில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த தேர்வு நடந்துள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரு விண்வெளி வீரர்களுக்கும், அமீரகத்தின் முதலாவது விண்வெளி வீரர் ஹஸ்ஸா அல் மன்சூரி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். மிகவும் மகிழ்ச்சி அமீரகத்தின் சார்பில் முதலாவது பெண் விண்வெளி வீராங்கனையாக தேர்வான நோரா அல் மத்ரூசி இதுகுறித்து கூறுகையில், ‘‘இந்த தேர்வு தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. குழந்தைப் பருவம் முதல் விண்வெளிப் பயணம் தனது விருப்பமாக இருந்து வந்தது. தற்போது இந்த கனவு நினவாகியுள்ளது’’ என்றார். இதேபோல் மற்றொரு விண்வெளி வீரர் முகம்மது அல் முல்லாவும் இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இவர் விமான போக்குவரத்து துறையில் இருந்து விண்வெளிப் பயண திட்டத்துக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.