News details

அமெரிக்காவில் கடையில் புகுந்து துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் காயம்

அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் கோஷ்கோனங் நகரில் ஸ்னேப்பி மார்ட் என்ற பெயரில் வீட்டுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடைக்குள் திடீரென புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், ஒருவர் கொல்லப்பட்டார். 3 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதுபற்றி மிசோரி போலீசார் விசாரணை மேற்கொண்டு சந்தேகத்திற்குரிய 28 வயது நபரொருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கியால் சுட்டவருக்கும், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கும் இடையே தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது.