News details

அண்ணாமலைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வண்ணம் உள்ளது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. இதனால் தமிழக அரசு மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் நடந:து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு தற்போது கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறhர் என்பதை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி