News details

2021 ஆண்டுக்கான TNPSC தேர்வுகள் அறிவிப்பு

ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் துறை சார்ந்த தேர்வுகளுக்கான நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் துறை சார்ந்த தேர்வுகள் ஆண்டுக்கு 2 முறை, அதாவது மே மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த தேர்வுகளின் நடைமுறையினை சீரமைக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஜூன் 2021-ல் நடைபெற இருக்கும் துறைத் தேர்வுகளில் கணினி வழித் தேர்வினை அறிமுகம் செய்கிறது என்றும் அதற்கான திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம், தேர்வு முறை, தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி, கொள்குறிவகை தேர்வுகளுக்கான துறைத் தேர்வுகள் கணினி வழித் தேர்வாக நடைபெறும் என்றும் விரிந்துரைக்கும் வகையிலான துறைத் தேர்வுகளை பொறுத்தமட்டில் தற்போதுள்ள நடைமுறையான எழுத்துத் தேர்வு வகையிலேயே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கணினி வழித் தேர்வுகள் வருகிற ஜூன் மாதம் 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரையிலும், விரிந்துரைக்கும் வகையிலான எழுத்துத் தேர்வு 27-ந் தேதியில் இருந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் துறை சார்ந்த தேர்வுகளில் மாற்றம் ஜுன் 22 முதல் 26 வரை கணினி தேர்வு -27ம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெறும்