News details

மணல் அள்ளிய 2 JCB இயந்திரம் மற்றும் லாரி பறிமுதல்

கோவில்பட்டி அருகே அனுமதியின்றி கண்மாய் பகுதியில் மணல் அள்ளிய 2 nஜசிபி இயந்திரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது திருமங்கலங்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள கண்மாய் மூலமாக இப்பகுதி மக்கள் விவசாய பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த கண்மாய் பகுதியில் இருந்து ஓலைகுளம் செல்லும் ஓடையில் நேற்றிரவு சில மர்ம நபர்கள் nஜசிபி இயந்திரங்கள் மற்றும் லாரியை கொண்டு வந்து சட்ட விரோதமாக மணல் திருடியுள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்தும் வருவாய்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் திருமங்கலங்குறிச்சி கிராம மக்கள் விரைந்து சென்று அவர்கள் மணல் திருடுவதை தடுத்தது மட்டுமன்றி, 2 nஜசிபி இயந்திரங்கள், மற்றும் ஒரு லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து கயத்தாறு அருகே அனுமதியின்றி ஒடையில் மண் அள்ளிய வாகனங்களை பறிமுதல் செய்து கயத்தார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையெடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மணல் அள்ளி கொண்டு இருந்த லாரி ஓட்டுனர் உக்கிரன்கோட்டையை சேர்ந்த மகேந்திரன், nஜசிபி டிரைவர்கள் வாகைகுளத்தினை சேர்;;ந்த ராஜ், பன்னீர்ஊத்தினை சேர்ந்த செல்லத்துரை ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்பட்டி அனுமதியின்றி கண்மாய் பகுதிகளில் மணல் அள்ளிய 3 பேர் கைது 2 nஜசிபி இயந்திரம் மற்றும் லாரி பறிமுதல் - போலீசார் நடவடிக்கை