News details

கொரோனா கட்டுப்பாடுகள் பலன் அளிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்

கொரோனா தொற்றின் தற்போதைய நிலைமை பற்றியும், அதை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து 8-ந் தேதியன்று அனைத்து மாநிலங்களோடு காணொலி காட்சி மூலம் பிரதமர் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, வருவாய்த்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, பொதுத்துறை முதன்மைச் செயலாளர் பி.செந்தில் குமார், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.