News details

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: எழுச்சி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய (8 முறை) அணி என்ற சிறப்புக்குரிய சென்னை சூப்பர் கிங்ஸ் அதில் 3 முறை மகுடம் சூடியிருக்கிறது. வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் முதல்முறையாக கடந்த சீசனில் லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சிக்குள்ளானது. முந்தைய அனைத்து தொடர்களிலும் குறைந்தது ‘ளே-ஆப்’ சுற்றை எட்டியிருந்த சென்னை அணிக்கு கடந்த ஆண்டு போட்டி தான் மிக மோசமான அனுபவத்தை தந்தது. கொரோனா அச்சத்தால் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகியோர் கடைசி நேரத்தில் விலகியது, சூதாட்ட பிரச்சினையால் இரண்டு ஆண்டு தடை நடவடிக்கைக்குள்ளான சென்னை அணி மறுபிரவேசம் செய்த 2018-ம் ஆண்டில் சாம்பியன் கிரீடத்தை கையில் ஏந்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதே போல் கடந்த ஆண்டு சந்தித்த சரிவில் இருந்து வெகுண்டெழுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சந்திக்கிறது.