News details

பிரம்ம முகூர்த்தமும்.. பலன்களும்..

பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்தால் பல அற்புத நன்மைகள் நிகழ்வதாக சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன. வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக்கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புத்துயிர் கிடைக்கின்றது. உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் வழங்குகின்றது. கண்கள் -ஆரோக்கியத்தையும், உடல் - வலிமையும் பெறுகின்றன. அதனால்தான் சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. எல்லாருமே ஒரு குறிப்பிட்ட நேரத்தில், வீட்டில் வேலை செய்ய வேண்டும். பின்பு குறிப்பிட்ட நேரத்தில் ஓய்வு எடுக்க வேண்டும். உறங்க வேண்டிய நேரத்தில் விழித்திருந்தால், நோய்கள் எல்லாம் நம்மை நோக்கி வரும். அதனால்தான் நமது பெரியோர்கள் அதிகாலையில் எழ வேண்டும் என்றார்கள். அந்த நேரத்தில் இறைவனிடம் வைக்கின்ற அனைத்துவித பிரார்த்தனைகள் கண்கூடாகவே நிறைவேறும்.