News details

குடிபோதையில் லாரி ஓட்டிச்சென்ற ஓட்டுனரால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயி

திருப்பூரில் குடிபோதையில் லாரி ஓட்டிச்சென்ற ஓட்டுனரால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி கதிரவன் என்பவர் குடிபோதையில் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். லாரி காமநாயக்கன்பாளையம் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி எதிரே வந்த அடுத்தடுத்த இரண்டு கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் அடியில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த கார்த்திகேயன் அவரது மனைவி சரண்யா மற்றும் அவர்களது 7 வயது மகள் தனிகா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மற்றெhரு காரில் இருந்த 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் லாரி ஓட்டியதால் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் குடியோதையில் தாறுமாறhக லாரி ஓட்டிச்சென்ற ஓட்டுனரால் விபத்து அடுத்தடுத்து 2 கார்கள் மீது மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி 3 பேர் படுகாயம் - விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை