News details

முகக் கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம்.

உதகையில் பல பகுதிகளில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக முக கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுதலையும் பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் முகக் கவசம் அணியாமல் சுற்றி திரிபவர்களுக்கு நகராட்சி நிர்வாகம், வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், மற்றும் காவல் துறையினர் என அனைவரும் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில் உதகை நகராட்சி தினசரி சந்தையில் போலீசார் இன்று முகக் கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்ததோடு, கட்டாயம் முகக்கவசத்தோடு தான் வெளியில் வரவேண்டும் என்று அறிவுரையும் வழங்கியுள்ளனர். உதகை முக கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபதாரம் கட்டாய முக கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுரை