News details

காட்டு யானைகள் அட்டகாசம்

காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையில் மூழ்கியுள்ளனர். வேலு}ர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஆந்திர மாநில எல்லையில் உள்ள சைனகொண்டா, மோடிகுப்பம் என 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இங்கு இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்கு படையெடுக்கும் சுமார் 20க்கும் மேற்பட்ட யானை கூட்டம் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டு , பல ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த , நெல்.வாழை.மாங்காய். என அனைத்தையும் சேதம் செய்து வருகிறது . அந்த வகையில் நேற்று இரவு சைனகொண்டா.மற்றும் மோடிகுப்பம் கிராமத்தில் உள்ள சீத்தாபதி,சீனிவாசன். விஜய குமார் என்பவர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ,சுமார் 200க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் 100க்கு மேற்பட்ட மாமரங்கள், கரும்பு, நெல் பயிர்களை சேதம் செய்தது .இதன் மதிப்பு 7 லட்சம் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகின்றனர் .மேலும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று வேதனையுடம் கூறுகின்றனர். மேலும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர் வேலுர் காட்டு யானைகள் அட்டகாசத்தால் அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம் உரிய இழப்பீடு வழங்க பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை