News details

காட்டு மாடுகள் கிணற்றுக்குள் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம் வனப்பகுதியில் இருந்து கண்று குட்டியுடன் வழிதவறி வந்த இரண்டு காட்டு மாடுகள் கிணற்றுக்குள் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட அய்யலு}ர் பேரூராட்சி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் காட்டுமாடு , மான,; குரங்கு உட்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. தொப்பையா சாமி மலை பகுதியில் இருந்து ஒரு வயது கன்று குட்டியுடன் நான்கு வயதுடைய இரண்டு காட்டு மாடுகள,; அய்யலு}ர் பேரூராட்சிக்கு உட்பட்ட சுக்காம்பட்டி என்ற பகுதியில் வெள்ளையன் என்ற விவசாயிக்கு சொந்தமான சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் உணவு தேடி வந்த நிலையில் மூன்று காட்டு மாடுகளும் கிணற்றில் விழுந்தது. கிணற்றில் சத்தம் கேட்டதை அறிந்த இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உடனடியாக கிணற்றில் வந்து பார்த்துள்ளனா.; கிணற்றில் 3 காட்டு மாடுகள் இருந்ததை கண்டு உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனா.; தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் கிரேன் மூலம் காட்டுக மாடுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் இரண்டு காட்டு மாடுகள் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்கும் பணியில் ஈடுபாடு