News details

5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை

யுகாதி பண்டிகையை முன்னிட்டு போச்சம்பள்ளி வாரச்சந்தையில் 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்தனர். ஆடுகளை வாங்குவதற்காக, கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, ஆம்பூர், வேலு}ர், திருவண்ணாமலை, மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநில வியாபாரிகள் வந்தனர். மேலும் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் தெலுங்கு பேசும் மக்கள் வந்திருந்து ஆடு, கோழி, மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர். வழக்கமாக சந்தையில், 10 கிலோ எடை கொண்ட ஆடு அதிகபட்சமாக, 4,000 முதல், 5,000 ஆயிரம் ரூபாயும், 15 கிலோ எடை கொண்ட ஆடு 7,000 ரூபாய் வரை விற்பனையாகும். ஆட்டுக்கிடா 12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகும். வரும் செவ்வாய் கிழமையன்று யுகாதி பண்டிகையை என்பதால் ஆட்டின் விலை சற்று அதிகரித்து, 10 கிலோ எடை கொண்ட ஆடு, 7 ஆயிரம் ரூபாய் வரையும், 15 கிலோ எடை கொண்ட ஆடு, 10 ஆயிரம் ரூபாய் வரையும், ஆட்டுக்கிடாய் அதிகபட்சமாக, 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. இதனால் 5 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். போச்சம்பள்ளி வாரச்சந்தையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள ;விற்பனை என வியாபாரிகள் மகிழ்ச்சி யுகாதி பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்